கொரோனா வைரஸ் – சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1900ஆக உயர்வு

299

சீனாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சியில் சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 900-மாக உயர்ந்துள்ளது. இதேபோன்று வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 73ஆயிரத்தை எட்டியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of