“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு..! பரபரப்பானது ரோடு..! வைரல் வீடியோ..!

625

ஆந்திர பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலப்பட்டினம் பகுதியில் ஒரு இளம் கன்னுக்குட்டியை அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கடந்த மாதம் ஏற்றிக்கொன்றது. தன்னுடைய குட்டி இறந்த சோகம் தாங்க முடியாமல், அதன் தாய் பசு அந்த இடத்திலேயே மிகவும் கோபத்துடன் இருந்தது.

சில மணி நேரங்களுக்கு பிறகு, இந்த கன்னுக்குட்டியின் உடல் இருப்பது, அரசு அதிகாரிகளுக்கு தெரிய வரவே, அவர்கள் ஒரு ரிக்சா ஓட்டுநரை அழைத்து, அந்த கன்னுக்குட்டியின் உடலை அப்புறப்படுத்த சொல்லியிருந்தனர்.

அவர்களின் உத்தரவின் பேரில், அந்த ரிக்சா ஓட்டுநரும் கன்னுக்குட்டியின் உடலை அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.

அப்போது, மிகவும் கோபத்துடன் வந்த தாய் பசு, இவர் தான் தனது குட்டியை ஏற்றிக்கொலை செய்ததாக நினைத்துக்கொண்டு அந்த ரிக்சா ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.