தடை செய்யப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது கேலிக்கூத்தானது

651

தீபாவளி பண்டிகையொட்டி தடை செய்யப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செங்கொடி ஏற்றினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் மோடியின் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பசி, பஞ்சம், வேலை உள்ளிட்டவை தலைவிரித்து ஆடுவதாக குற்றம்சாட்டினார். மேலும், பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்களை கண்டுக்கொள்ளாமல், தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்ததற்காக சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது அவசியமற்ற ஒன்று என குறிப்பிட்டார்.

Advertisement