மலை உச்சியில் போட்டியை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர் – வைரலாகும் புகைப்படம்

754

இமாச்சல பிரதேசத்தில் கிரிக்கெட் ஆர்வம் உள்ள இளைஞர் ஒருவர் பழத்தோட்டத்தில் வேலை செய்தவாறு மொபைல் போனில் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பேராவலையும் உருவாக்கியுள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டு மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இப்போட்டியை உலகமெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு பார்த்து வருகின்றனர். இந்தியாவில் இப்போட்டிக்காக பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பல்வேறு வணிக வளாகங்களில் பெரிய திரையில் போட்டி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அங்கு வரும் மக்கள் ஆரவாரத்துடன் போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் குள்ளு மாவட்டத்தில் உள்ள மங்லோர் கிராமத்தில் கிரிக்கெட் ஆர்வம் உள்ள இளைஞர் ஒருவர் பழத்தோட்டத்தில் வேலை செய்தவாறு மொபைல் போனில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of