48 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றை புரட்டி போட்ட ‘இண்டீஸ்’.., மாபெரும் சாதனை படைத்த ஜோடி

1619

சுமார் 48 ஆண்டு கால கிரிக்கெட் உலகில் எண்ணெற்ற பல வீரர்கள் சாதனை படைத்திருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது நிகழ்த்திய சாதனை யாராலையும் முறியடிக்க முடியாது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

தற்போது, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் நேற்று தொடங்கியது. இதன் முதல் போட்டியே வெஸ்ட் இண்டீஸ் அணியும், அயர்லாந்து அணியும் பல பரிட்சை மேற்கொண்டனர்.

இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜான் கேம்ப்பெல், விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் இருவரும் இணைந்து புதிய அத்தியாயம் படைத்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 365 ரன்கள் (47.2 ஓவர்) திரட்டி மலைக்க வைத்தனர்.சுமார் 48 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஜோடி கடந்த ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக தொடக்க விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனை முறியடிக்கப்பட்டு இருக்கிறது.

ஒட்டுமொத்த அளவில் பார்த்தால் இது, வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல்-சாமுவேல்ஸ் கூட்டணி 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 2-வது விக்கெட்டுக்கு 372 ரன்கள் எடுத்த சாதனைக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

இச்சாதனையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்தது. பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி 34.4 ஓவர்களில் 185 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வி அடைந்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of