தோனியை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த ரோகித்..!

340

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி மொகாலியில் இன்று (மார்ச் 10) நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கொடுத்தனர். குறிப்பாக, ஹிட்மேன் ரோகித் சர்மா தனது 40-வது ஒரு நாள் அரைசதத்தை அடித்தார்.

இந்திய அணிக்காக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தோனியைப் பின்னுக்குத்தள்ளி ரோகித் சர்மா முதலிடம் பிடித்தார். இவருக்கு அடுத்த இடத்தில் 217 சிக்சர்களுடன் தோனி உள்ளார். தோனி மொத்தம் 224 சிக்சர்கள் அடித்துள்ளார். அதில், 7 சிக்சர்கள் ஆசிய லெவன் அணிக்காக அடித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of