இந்திய அணி ராணுவ தொப்பியை அணிந்தது விளையாடிய விவகாரம்

289

இந்தியா அணி ராணுவ தொப்பியை அணிந்தது விளையாடிய விவகாரத்தில் பாகிஸ்தான் குற்றச்சாட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது.இந்தப் போட்டியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பியை அணிந்து விளையாடினர்.

அத்துடன் இந்திய வீரர்கள் ராஞ்சிப் போட்டிக்கான ஊதியத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகள் கல்விச் செலவுக்கு வழங்குவதாக தெரிவித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of