”இந்தி தெரியாமல் பிற வீரர்களால் புறக்கணிக்கப்பட்டேன்.. தினமும் அழுவேன்..” – வேதனையடைந்த அஸ்வின்

1377

தனக்கு இந்தி எழுதப்படிக்கத் தெரிந்தும் பேச தெரியாததால் தனிமைப்படுத்தப்பட்டு மனவேதனைக்கு உள்ளானேன் என கிரிக்கெட் வீரர் அஸ்வின் உருக்கமுடன் பேசியுள்ளார்.

திண்டுக்கல்லில் மாவட்ட கிரிக்கெட் கிளப் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற பேர்களுக்கு பரிசளிக்கும் போட்டி திண்டுக்கல் பிஎஸ்என்எல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பேசத் துவங்கும் போதே  இந்திய கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஒவ்வொரு நாளும் விளையாட செல்லும் போது அழுது கொண்டே செல்வேன். வீட்டுக்கு திரும்பும் போது சிரித்துக் கொண்டே வருவேன். எனக்கு இந்தி எழுதவும் படிக்கவும் தெரியும். ஆனால் பேச வராது.

இதனால் நான் பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் விடப்பட்டேன். இதனால் நான் அழுது கொண்டே இருந்தேன் என்று இந்தி மொழி பேச தெரியாததால் பிற வீரர்கள் தன்னை புறக்கணித்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார். சில கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வேதனைப்பட்டார்.

அவர்களுக்கு பதில் அளிக்கையில் வாய்ப்பு உங்களை தேடி வராது. நீங்கள்தான் தேடி செல்லவேண்டும்.இதனால்  வெற்றி அடைவீர்கள் என்று அஸ்வின்  பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பிஎஸ்என்ஏ கல்லூரி துணைத்தலைவர் ரகுராம். திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சாம் பாபு. மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் சார்பாக டாக்டர் பாபா. சிவக்குமார் மற்றும் பாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of