ஒரு நாள் விளையாட்டு போட்டியில் ஓய்வு! கெய்ல் அதிரடி!!

546

1999ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகமான கிறிஸ் கெய்ல் சர்வதேச அளவில் மிகச்சிறந்த அதிரடி வீரராக திகழ்ந்து வருகிறார்.

2000ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கெய்ல், 2014ம் ஆண்டுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் கெய்ல் ஆடாமல் இருந்தார். உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் கெய்ல் இடம்பிடித்துள்ளார்.

எனவே உலக கோப்பையில் அவர் ஆடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில், உலக கோப்பைக்கு பின் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.