“இவ்வளவு காசு இருந்தா போதும்.. செட்டில் ஆயிடுவேன்..” தோனி சொன்ன வார்த்தை..? நினைவு கூர்ந்த கிரிக்கெட் வீரர்..!

3582

கிரிக்கெட்டில், உலக அளவில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருக்கும் தல தோனி, இந்தியாவிற்கு பல்வேறு கோப்பைகளை பெற்றுத் தந்திருக்கிறார்.

இவரது ஆட்டத்தை ஐபிஎல் போட்டியில் காண்பதற்கு பல்வேறு ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கொரோனா வைரசின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆஸ்க் ஜாபர் என்ற ஹேஷ்டேக்கை தயார் செய்து, அதில் தன்னிடம் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்கலாம் என்று கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து ரசிகர் ஒருவர், தோனியுடன் மிகவும் பிடித்தமான அனுபவங்களை பகிர முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த வாசிம் ஜாபர், “இந்திய கிரிக்கெட் அணியில் கலந்து கொண்ட 1-ல் இருந்து 2 வருடங்களின் போது 30 லட்சங்கள் மட்டும் கிரிக்கெட்டில் இருந்து சம்பாதித்தால் போதும், அதன்பிறகு ராஞ்சியில் செட்டிலாகி நிம்மதியான வாழ்க்கையை வாழத் தொடங்குவேன் என்று தோனி தெரிவித்தார்.”

இவ்வாறு வாசிம் ஜாபர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of