உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை அடித்து ஓடவிடுமா இந்தியா?

562

புல்வாமா தாக்குதலின் எதிரொலியாக, ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில், இந்திய அணி பாகிஸ்தானுடன் ஆடுவதை தவிர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான சசி தரூர்,‘1999ல் இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே கார்கில் போர் நடைபெற்ற போதும், இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. அதில் வெற்றியும் பெற்றது.

தற்போது நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்த்தால், 2 புள்ளிகளை இழப்பது மட்டுமின்றி நாம் போட்டியிடாமலேயே தோல்வி அடைந்ததற்கு சமம்’ என கூறியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில், இந்தியா – பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து, இன்று நடைபெறவிருக்கும் பிசிசிஐ நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

உலகக் கோப்பை தொடரில், இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜூன் 16ஆம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of