தெரிந்த ஆணுடன் காரில் ஏறிய ஷோபனா…! இறங்கியது எங்கே..? கொலை செய்தது யார்..?

1286

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள பெண்கள் அழகு நிலையத்தில் ஷோபனா 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் பெயர் செந்தில். இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் ஷோபனா வழக்கமாக வரும் பேருந்தை தவறவிட்டுவிட்டதாக தனது கணவர் செந்திலிடம் தொலைபேசியில் கூறியுள்ளார். மேலும் தான் தெரிந்த நபர் ஒருவருடன் வருவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் இரவு 9 மணி ஆகியும், வீட்டிற்கு வரவில்லை. இதனால், உறவினர்கள் அவரை தேடி அலைந்துள்ளனர். ஆனால், அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவு முழுவதும் காவல்துறையினராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இந்நிலையில், புள்ளிபாளையம் பகுதிக்கு அருகில் உள்ள குட்டையில் ஷோபனாவின் சடலம் மிதப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த ஷோபனா குட்டையில் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருகில் ஷோபனா அவரது மகனுக்கு ஆசையுடன் வாங்கி வந்த புத்தாடைகளும் சிதறி கிடந்துள்ளன. இதுபற்றி காவல்துறையினர் ஷோபனா எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of