பழைய பகை சார்.. கூலித்தொழிலாளியை 3 வருடங்களாக பழிவாங்கும் “காக்கா”.. – அதிரவைக்கும் காரணம்..!

1235

மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவபுரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷிவ கேவாட். இவர் ஒரு தின கூலி. இவர் வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம் காக்கைகள் இவரை குறிவைத்து தாக்குகின்றனர்.

\முதலில் இது தற்செயல் என நினைத்த இவர், ஊருக்குள் வேறு யாரையும் காக்கைகள் தாக்குவது இல்லை என்பது தெரிந்த பிறகு தன்னை காக்கைகள் பழிவாங்கிறது என்பதை புரிந்து கொண்டார்.

வீட்டை விட்டு வெளியேறும்போதெல்லாம், தாக்க வரும் காக்கைகளிடமிருந்து தன்னை தற்காத்து கொள்ள, கைகளில் கம்புடனே வெளியே வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த தாக்குதல் நடந்து வருகிறதாம். காக்கைகள் கடித்ததற்கான தழும்புகளும், காயங்களும் இவர் உடல் முழுவதிலும் காணப்படுகிறது.

இது குறித்து ஷிவ கேவாட்டிடம் கேட்டபோது, ‘முன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குஞ்சு காக்கை வலையில் சிக்கிகொண்டிருந்த போது அதனை காப்பாற்ற முயன்றேன்.

அதனை தூக்கியபோது அது என்னுடைய கையிலியே இறந்துவிட்டது, அதை நான் தான் கொன்றேன் என மூன்று ஆண்டுகளாக மற்ற காக்கைகள் பழிவாங்கி வருகிறது.’ என கூறினார்.

இச்சம்பவம் பரிதாபமான சம்பவமாக இருந்தாலும், அந்த பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு, இவர் தான் பொழுதுபோக்கு என கூறுகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of