இதனால தான் தோனி அந்த கடைசி பந்தை அடிக்கலையா? ருசிகர தகவல்!

1823

ஐபிஎல் போட்டியில் இதுவரை எத்தனையோ போட்டி நடந்திருந்தாலும் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு மறக்க மாட்டார்கள்.

கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார் தல தோனி. கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். குறைந்தபட்சம் ஒரு ரன் எடுத்திருந்தால் கூட சூப்பர் ஓவர் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

இந்த நிலையில் 8 பந்தில் 27 ரன்கள் சென்னை அணி எடுக்க வேண்டும் என்ற நிலையில் மைதானத்தில் பார்வையாளராக இருந்த ஒரு குட்டிப்பாப்பா பதாகை ஒன்றை காண்பித்தார்.

அதில் ‘ஹேய் தோனி, எங்க விராத் கோஹ்லி ஜெயிக்கணும்’ ப்ளீஸ்’ என்று எழுதப்பட்டிருந்தது. கள்ளம் கபடம் இல்லாத அந்த குட்டிப்பாப்பாவின் முகத்தில் தெரிந்த சோகத்தை போக்க வேண்டும் என்பதற்காகவே தோனி விட்டுக்கொடுத்தார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது தற்செயலாக நடந்த ஒன்று என்றாலும் குட்டிப்பாப்பாவின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள், ஷேர்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of