“என்ன முகத்தில் கடுகு வெடிக்குது..” உச்சகட்ட கோபத்தில் தோனி..! வைரலாகும் பழைய வீடியோ..! எதுக்கு தெரியுமா..?

609

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணிக்கு பல்வேறு கோப்பைகளையு வென்றுக்கொடுத்துள்ளார். அவரின் இந்த வெற்றிக்கு காரணம் என்ன என்று கேட்டால், எப்போதும் கூலாக இருப்பது தான் என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள்.

பல்வேறு சீரியசான நேரங்களில் கூட தோனி அமைதியாக தான் இருப்பார். ஆனால், இவ்வளவு கூலாக இருக்கும் தோனி கூட, சில சமயங்களில் சிறிய விஷயங்களுக்கு கோவப்பட்டுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு அன்று சேம்பியன்ஸ் லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், சி.எஸ்.கே மற்றும் கே.கே.ஆர் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சி.எஸ்.கே 157 ரன்கள் எடுத்தது.

குறைவான ரன்கள் எடுத்ததால், மொத்த அணியும் பதற்றத்தில் இருந்தது. போட்டியின் 4-வது ஓவரை ஈஸ்வர் பாண்டே வீச வேண்டும். ஆனால் குழப்பத்தில் மோஹித் பந்துடன் ஓடிவந்தார். இதனைப்பார்த்த டோனி கடுப்பாகி, வேண்டாம் என சைகை காட்ட மோஹித் பந்தை திரும்ப ஈஸ்வரிடம் கொடுக்க சென்றார்.

இது விதிமீறல், பந்தை முதலில் வீசவந்தவர் தான், பவுலிங் செய்ய வேண்டும் என்று அம்பயர் ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டார். இதனால் கோபத்தில் இருந்த தோனியின் முகம், கடுகு தாழித்ததைப்போன்று படக் படக்கென்று வெடித்தது.

தற்போது இந்த வீடியோவைப் பகிர்ந்து சாம்பியன்ஸ் லீக் போட்டி மீண்டும் வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுக்க, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு சிஎஸ்கேவும் பதிலளித்து இருக்கிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of