CSK தலைமை அதிகாரி சொன்ன தகவல்! குஷியில் டோனி ரசிகர்கள்!

1004

சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.எஸ்.கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கலந்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒப்பந்தப்படி, தோனி கட்டாயமாக சி.எஸ்.கே அணிக்காக மூன்று ஆண்டுகள் விளையாடுவார் என்றும், அவரே தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார் எனவும் தெரிவித்தார்.

மேலும், தோனி தன்னுடைய ஓய்வு முடிவு குறித்து தங்களிடம் எதுவும் கூறவில்லை என்றும், அவர் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவார் என்றும் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் பெண்களுக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of