இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான்.., சென்னை ஆளுமா? வீழுமா?

367

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிரடியை மட்டும் விருந்தாக வைக்கும் அனல் பறக்கும் ஐபிஎல் தொடரின் 25 வது லீக் ஆட்டத்தில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடப்பு சாம்பியன் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் பல பரிட்சை மேற்கொள்கின்றனர்.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டது, இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பின்பு பேட்டிங் செய்யத்தொடங்கிய ராஜஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரர்களான அஜிங்கியா ரகானே, ஜோஸ் பட்லர் ஆரம்பம் முதலே சென்னை அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாற்றத்துடன் விளையாடத்தொடங்கினர்.ராஜஸ்தான் அணியின் தடுமாற்றத்தை பயன்படுத்திக்கொண்ட சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் மலமலவென விக்கெட்டுகளை குவிக்கத்தொடங்கினர். இதில் ரகானே 14 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 23 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும், ராகுல் திரிபாதி 10 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அப்போது ராஜஸ்தான் அணியின் எண்ணிக்கை 5 விக்கெட்டுக்கு 78 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ் சிற்டிது தாக்குப்பிடித்தார். அவரும் 28 ரன்னில் அவுட்டானார். ரியான் பராக் 16 ரன்னில் வெளியேறினார்.கடைசி ஓவரில் 18 ரன்கள் அடித்தனர். இறுதியில், ராஜஸ்தான் அணி கொடுக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

சென்னை அணி சார்பில் தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்பு களமிறங்கிய சென்னை அணி 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு விளையாடத்தொடங்கினர். சென்னை அணியின் அதிரடி தொடக்க வீரர்களான வாட்சன், டூ ப்லிஸிஸ் தங்களின் நிதானமான ஆட்டத்தை தொடங்கினர்.

இருப்பினும் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் டெக்கவுட் ஆனார். பின் வந்த சுரேஷ் ரைனாவும் வந்த வேகத்தில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்பு வந்து வீரர்களும் சொர்ப்ப ரன்களில் வெளியேறினர். சென்னை அணி 6 ஓவர் முடிவிற்கு 4 விக்கெட்டுகளை இழந்து 25 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். களத்தில் தல தோனியும், ராயுடுவும் விளையாடி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of