புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் CSK

1790

2008-ஆம் ஆண்டு முதல் ஒரே சீருடையுடன் களம் கண்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சீருடையை முதன் முறையாக அதன் வடிவமைப்பில் மாற்றம் செய்துள்ளது.

ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில், ராணுவ சீருடைக்குரிய நிறம் சீருடையின் தோள்பட்டை பகுதியில் இடம் பெற்றுள்ளது. ராணுவத்தின் முக்கியத்துவத்தையும், அவர்களின் தன்னலமற்ற சேவையையும் பாராட்டும் நோக்கில் ராணுவ சீருடையின் வண்ணத்தை இணைத்துள்ளதாக, சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய சீருடையுடன் கேப்டன் தோனி உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement