IPL போட்டி..! இன்று மோதும் சென்னை – மும்பை..! பந்து வீசும் அணி எது..?

836

எப்போதும் ஏப்ரல் மாதமே தொடங்கிவிடும் ஐ.பி.எல் போட்டிகள், வைரஸ் தொற்று காரணமாக தாமதம் அடைந்தது. இந்நிலையில், இன்று ஐ.பி.எல் திருவிழா கோலாகலத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

முதல் போட்டி வழக்கம் போல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருக்கிறது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற சென்னை அணி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கடந்த ஐ.பி.எல் போட்டி இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணி மோதியது.

அந்த போட்டியில்; சென்னை தோல்வி அடைந்ததால், தற்போது பழிக்கு பழி வாங்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.