சென்னை அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு..?

2060

நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய சென்னை அணி, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி, துவக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது. பின்னர் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் – ஸ்மித் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் சென்னை அணி, இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளதால், புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் சென்னை அணியின் ப்ளே ஆப் வாய்ப்பும் தகர்ந்துள்ளது.

இதனிடையே ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திரசிங் தோனி படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக கருதப்படும் தோனி தலைமையிலான சென்னை அணி, 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஆனால் இந்த முறை அந்த வாய்ப்பு பறிபோகியுள்ளது.

Advertisement