IPL 2019 – சிஎஸ்கே பந்து வீச்சு!

510

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்கும் நிலையில், பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

பிற்பகல் முதலே மைதானத்திற்கு ரசிகர்கள் வரத் தொடங்கி விட்டனர். இதை ஒட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 5.15 மணி முதல் ரசிகர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தீவிர சோதனைகளுக்குப் பின்னரே அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த 13 போட்டிகளில் சென்னை அணி 12இல் வென்றுள்ளது. பெங்களூருவுக்கு எதிராக இங்கு நடந்த போட்டிகளிலும் 85 விழுக்காடு வெற்றியை சென்னை அணி பதிவு செய்துள்ளது. இதனால் இன்றைய போட்டியை வெற்றிக் கணக்குடன் சென்னை அணி தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னை அணியில் தோனி, ரெய்னா, ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், டுவெயின் பிரேவோ, ஷ்ரதுல் தாகூர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர் ஆகிய வீரர்களும்

ஆர்.சி.பி அணியில் கோலி, பார்த்தீவ் பட்டேல், மொயீன் அலி, ஹெட்மயர், டி வில்லியர்ஸ், டுபே, கிராண்ட்ஹோம், உமேஷ் யாதவ், சஹால், சிராஜ், சைனி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of