கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம் – அரண்டு போன பயணிகள்

186

கடலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்திலிருந்து பின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த பேருந்து புவனகிரியை அடுத்த கீரப்பாளையம் அருகே வந்தபோது திடீரென பேருந்தின் பின் பக்க சக்கரம் தனியே கழன்று ஓடியது. கழன்று வேகமாக ஓடிய சக்கரம் சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு வீட்டின் கழிப்பறை கதவை உடைத்துக்கொண்டு கழிப்பறையின் மேற்கூரையில் சொருகிக் கொண்டது.


அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த பயணிகளுக்கும் காயம் ஏற்படாதநிலையில், ஓட்டுநர் சாமார்த்தியமாக செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
பேருந்தின் பின் சக்கரம் கழன்று விபத்து ஏற்பட்ட நிலையில் மற்றொரு சக்கரமும் கழன்று விழுவதற்கு தயார் நிலையில் இருந்தது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசு பேருந்தில் சரியான பராமரிப்பு மேற்கொள்வதில்லை என பயணிகளும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டினர்.