“நீங்க அண்ணன் – தங்கை.. சொன்னா கேளுங்க..” விடமுடியாத காதல் ஜோடி.. – இறுதியில் நடந்த விபரீதம்..!

5839

அண்ணன் – தங்கை முறை என்பதால் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் இளம் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுவதி என்ற இளம்பெண், உறவினர் மதன் என்பவரை காதலித்து வந்தார். மதன் அருகிலுள்ள கோட்டலாம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

சுவதி – மதன் இவரின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து மதன் – சுவதி இருவரும் உறவுமுறையில் அண்ணன் தங்கையாம். இதனால் இவர்கள் காதலுக்குக் கடுமையான எதிப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும் இருவரும் தங்கள் காதலை கைவிடுவதாக இல்லை.


இந்நிலையில் மனமுடைந்த இந்த காதல் ஜோடி, நேற்று இரவு ராமேஸ்வரம் விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of