உணவு வைப்பதற்கு சென்ற ஊழியர்.. நாய்கள் செய்த படுபயங்கர சம்பவம்..

1641

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கனகசபை நகரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் விஜயசுந்தரத்திற்கு சொந்தமான, புதுபூலாமேட்டில் உள்ள பண்ணையில், வல்லம்படுகையை சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

விஜயசுந்தரம் பண்ணை தோட்டத்தில் 2 ராட்வீலர் நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நாய்களுக்கு உணவு வைப்பதற்காக சென்ற ஜீவானந்தத்தை, அந்த நாய்கள் கடித்து குதறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement