தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் 41 பேர் இடமாற்றம்

534

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் 41 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி விமான நிலையம் வழியாக, பயணிகள் சிலர் சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த மாதம் திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, கடத்தலுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இதில் தொடர்புடைய திருச்சி விமான நிலைய சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசலு, 2 கண்காணிப்பாளர்கள் மற்றும் பயணிகள்13 பேர் உள்பட19 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில்,திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் 41 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, திருச்சி விமான நிலைய சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர்களாக நிர்மலா ஜோயல், அனுஜ்குமார், ரஜித்குமார், ஹேமந்த் யாதவ், யதுவேந்தர்சிங் ஆகியோர் புதிதாக பொறுப்பேற்க உள்ளனர். கார்கோ பிரிவில் நரேந்திரகுமார், ரவிகேஷ் குமார் ஆகியோர் பொறுப்பேற்கிறார்கள்.

Advertisement