கல்லூரி வளாகத்தில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு!

594

சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் கலைக்கல்லூரியில் படிக்கும் பில்லூரைச் சேர்ந்த மாணவன் ராஜா கல்லூரி வளாகத்தின் பின்புறம் சென்று கொண்டிருந்தார்.அப்போது மர்மநபர்கள் 3 பேர், ராஜாவை அரிவாளால் சரமாரியாக கழுத்து மற்றும் தலையில் வெட்டியுள்ளனர். பின்னர் இருசக்கர வாகனத்தில் மூவரும் தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜாவை சக மாணவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.