காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை கூடுகிறது

290

ஏழு கட்டமாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது.  தமிழகம், கேரளா தவிர காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை கூடுகிறது என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of