இமெயிலில் கூறப்பட்ட ஆசை வார்த்தை..! நம்பியதால் அன்மோலுக்கு நடந்த விபரீதம்..!

601

புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்த அன்மோல் ஜெயின் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரூஸ்தயார், அசோக் பாண்டே ஆகிய இருவர், இ-மெயில் மூலம் தொடர்புக்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள வங்கியில் அன்மோல் ஜெயின் என்கிற பெயரில் 78 கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும், 42 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் அந்த பணம் முழுவதையும் தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய அன்மோல் ஜெயினும், அவர்களது வங்கி கணக்கிற்கு 42 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். சில நாட்கள் பிறகு இ-மெயில் மூலம் இருவரையும் தொடர்பு கொண்டதில், அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில், மோசடி செய்த இருவர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.