ஆதி தமிழன் சைக்கிள் ஓட்டினானா..? திருச்சியில் உள்ள அதிசய சிற்பம்..!

1820

இன்றைய காலத்தில் கட்டும் பல கட்டிடங்கள், பாலங்கள், அணைகள் ஆகியவை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இடிந்து விழும் நிலைக்கு சென்றுவிடுகின்றன. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டிய கல்லணை இன்னும் சரியாமல் திடமாக இருக்கிறது.

இந்த ஒரு விஷயமே தமிழனின் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணம் ஆகும். இன்னும் பல்வேறு சிற்பங்களும், கட்டிடங்களும் பார்க்கும்போது, காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும்.அந்த அளவிற்கு வல்லமை கொண்டது தமிழனின் சிற்பக்கலையும், கட்டிடக்கலையும். இந்நிலையில் திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் ஒரு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பத்தில், ஒரு மனிதன் சைக்களில் அமர்ந்துக்கொண்டு இருப்பதைப்போன்று சிற்பம் ஒன்று உள்ளது.

 

சைக்கிள் 1890-ஆம் ஆண்டும் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வாகனம் ஆகும். ஆனால், ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலில், மனிதன் சைக்கிள் ஓட்டுவதைப்போன்று சிற்பம் இடம்பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், 80 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் புணரமைக்கப்பட்டபோது கூட இந்த சிற்பத்தை வடிவமைத்திருக்காலம் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த சிற்பத்தின் தென்மை குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தால், தமிழரின் சிறப்பு மேலும் சிறக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of