“கஜா புயல்” – சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை

790

வங்கக்கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 820 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானியை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் நவம்பர் 14 இரவு முதல் நவம்பர் 15 முற்பகலில் புயல் கரையை கடக்கும் வரை 7 மாவட்டங்களின் கனமழை மற்றும் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில்…,

கஜா புயல் நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே சுமார் 820 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என்றும் இந்தப் புயலானது நவம்பர் 15ம் தேதி முற்பகல் நாகப்பட்டினம், சென்னைக்கு இடையே கரையை கடக்கக் கூடும் என்றார். தற்போதைய நிலவரப்படி நவம்பர் 14ம் தேதி இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரை தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலில் பலத்த காற்று வீசும் என்ற அவர், மணிக்கு 80 முதல் 90 கி.மீட்டர் வேகத்திலும் சமயத்தில் 100 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என தெரிவித்தார்.

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் வரும் 15ம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை முதல் மிககனமழையும் ஒரு சில இடங்களில் கனமழையை விட அதிக மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்தார். மேலும் நாகப்பட்டினம், கடலூர், காரைக்காலில் இயல்பை விட 1 மீட்டர் உயரத்திற்கு உயரக்கூடும். கஜா புயலால் சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றார். மேலும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாலச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of