ஒடிசாவில் தயே புயலைத் அடுத்து கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

676

ஒடிசாவில் கரையை கடந்த தயே புயலைத் அடுத்து, தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மியான்மர் கடற்கரை பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்பகுதியில் புயல் ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் கரையை கடந்தது. தயே என பெயரிடப்பட்ட இந்த புயல் கரையை கடந்த போது 23 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

தயே புயல் கரையை கடந்ததை தொடர்ந்து கஜபதி, கன்ஜம், பூரி, ராயகாடா, காலஹண்டி, கொரபட், நபரங்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

பலத்த காற்று காரணமாக வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டன. பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of