’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

835

ரஜினிகாந்த் நடிக்கும் 167-வது படமாக ‘தர்பார்’ படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இப்படத்தில் ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், இவர்களுடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.Image result for darbar rajiniபொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இசைவெளியீட்டு விழாவின் போது லைகா நிறுவனத்தின் சாதனைகளை விளக்கும் விதமாக ஸ்பெஷல் வீடியோ ஒன்று ஒளிபரப்பபட்டது.

அதில் லைகா தயாரிப்பில் விஜய் நடித்த கத்தி, ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சின்ன வயதில் நிலாவைப் பார்த்து சாப்பிடுவோம். ஆனால் இப்போது நிலாவில் இறங்கியது போல இருக்கிறது.Image result for darbar rajini

உங்கள் எல்லாரையும் விட நான் தான் ரஜினிகாந்தின் மூத்த ரசிகன். எம்.ஜி.ஆர்க்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர்க்கும் ரஜினிக்கும் நிறைய வேறுபாடு இருக்கும். இப்போதிருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் ரஜினிகாந்தின் சாயல் கட்டாயம் இருக்கிறது” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பேசுகையில், 28 வருடத்திற்கு முன்பு தளபதியில் எப்படி ரஜினிகாந்தைப் பார்த்தேனோ அதுபோலவே இப்போதும் இருக்கிறார். என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of