“நான்கு மொழிகளில் அசத்த இருக்கும் ஆதித்திய அருணாச்சலம்” | Darbar

620

கடந்த 50 ஆண்டுகளாக ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் முடிசூடா மன்னாக ரசிகர்களின் இதயமென்னும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஒரு நடிகர் தான் “சூப்பர் ஸ்டார்” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் சிவாஜி ராவ் கேக்வாட் என்னும் ரஜினிகாந்த்.

ஒளிரும் நட்சத்திரம் என்ற பொருள் கொண்ட ரஜினிகாந்த என்ற பெயரை இவருக்கு அளித்தவர் இவரை சினிமா உலகில் அறிமுகம் செய்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்கள், ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளிவந்து ரசிகர்களை ஆர்ப்பரிப்பில் ஆழ்த்திய திரைப்படம் தான் “பேட்ட”, அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் படம் தான் ‘தர்பார்’.

நேற்று இந்த படத்தின் “Motion Picture” வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் தர்பார் மோஷன் போஸ்டரை, அந்தந்த மொழி பட பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி தமிழில் கமல்ஹாசனும், மலையாளத்தில் மோகன்லாலும், இந்தியில் சல்மான் கானும் தெலுங்கில் மகேஷ் பாபுவும் வெளியிட்டனர். வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக “தர்பார்” திரைக்கு வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் தர்பார் மோஷன் போஸ்டரை, அந்தந்த மொழி பட பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி தமிழில் கமல்ஹாசனும், மலையாளத்தில் மோகன்லாலும், இந்தியில் சல்மான் கானும் தெலுங்கில் மகேஷ் பாபுவும் வெளியிட்டனர். வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக “தர்பார்” திரைக்கு வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of