தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டார் மம்தா பானர்ஜி

313

நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வந்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.மாநில அரசிடம் அனுமதி பெறாமல் காவல்துறை ஆணையரிடம், சி.பி.ஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த மூன்று நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் சி.பி.ஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ராஜீவ் குமாரை கைது செய்ய கூடாது என சி.பி.ஐ-க்கு ஆணையிட்டது.

இதையடுத்து மூன்று நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டு வந்த மம்தா பானர்ஜி தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார். காவல் ஆணையரை கைது செய்ய கூடாது என்ற உச்சநீதிமன்றம் உத்தரவே, தங்கள் போராட்டத்துக்கு கிடைத்த தார்மீக வெற்றி என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு எதிரான தமது போராட்டம் அடுத்தக்கட்டமாக டெல்லியில் தொடங்கும் என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of