“…ப்பா என்ன அடி” – மாமியாரை கதறவிட்ட கொடூர மருமகள்

1263

ஹரியானாவில் மூதாட்டி ஒருவரை அவரது மருமகள் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகேந்திரகரில் உள்ள நிவாஸ் நகர் கிராமத்தில் பெண் ஒருவர் தனது வயதான மாமியாரை கொடூரமாக அடித்துக் கொடுமைப் படுத்தி வந்தார்.

இதை அவ்வப்போது கண்டு வெறுத்துப் போன அப்பெண்ணின் மகளும், மூதாட்டியின் பேத்தியுமான சிறுமி ஒருவர், மொபைல் போனில் அதைப் படம் பிடித்து தாயிடமிருந்து பாட்டியைக் காக்குமாறு சமூக வலைதளங்களில் பகிரவிட்டார்.

இதுகுறித்து அறிந்த ஹரியானா போலீசார், மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மூதாட்டிக்கு உடல் நலம் தேறிய பின்பு, அவர் எங்கு செல்ல விரும்புகிறாரோ, அங்கு அனுப்பி வைப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்