மிகவும் ஆபாசமாக திட்டிய மாமியார்..! மருமகள் செய்த அதிரவைக்கும் செயல்..!

1787

திருவண்ணாமலை மாவட்டம் சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள். 55 வயதாகும் இவருக்கு, வெங்கடேசன் என்ற மகனும், ஜோதி என்ற மருமகளும் உள்ளார். முனியம்மாளின் கணவர் உயிரிழந்ததால், தனது மகன் வீட்டில் அவர் வசித்து வந்துள்ளார்.

முனியாம்மாளுக்கும், ஜோதிக்கும் இடையே எப்போதும் மாமியார் மருமகள் சண்டை இருந்து வந்துள்ளது. முனியம்மாள் எப்போதும் ஜோதியை மிக ஆபாசமான வார்த்தைகளால் எப்போதும் திட்டியதாக கூறப்படுகின்றது. இந்த சண்டை சில நேரங்களில் காவல்நிலையம் வரை சென்றதும் உண்டு.

இந்நிலையில் சம்பவத்தன்று முனியாம்மாள், தனது மருமகளிடம் மாட்டை கட்டி வைக்க சொல்லியுள்ளார். இதையடுத்து ஜோதியும் மாட்டை கட்டி வைத்துள்ளார். ஆனால் அதனைக்கண்ட முனியம்மாள், மாட்டை சரியா இழுத்துக்கட்டக்கூடாவா தெரியாது என்று கூறி, ஆபாசமாக திட்டியுள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த ஜோதி, இரவில் மாமியார் தூங்கிக்கொண்டிருக்கும்போது, சுடு தண்ணீரை எடுத்து மூஞ்சியில் ஊற்றியுள்ளார். சூடு தாங்காமல் தூங்கிக்கொண்டிருந்த முனியம்மாள் அலறித்துடித்துள்ளார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு யாராவது வந்தால், நம்மை அடித்துக்கொண்று விடுவார்கள் என எண்ணிய ஜோதி, ஒரு இரும்பி கம்பியை வைத்து முனியம்மாளின் மண்டையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து முனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கிருந்து தனது அம்மா வீட்டிற்கு ஜோதி தப்பியோடினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஜோதி தான் கொலை செய்தார் என்பதை கண்டறிந்து, அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.