சொத்துக்காக அடியாட்களை வைத்து தந்தையை வீட்டில் இருந்து வெறியேற்றிய மகள்

137

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சொத்துக்காக, மகளே அடியாட்களை வைத்து தந்தையை வீட்டில் இருந்து வெறியேற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஓசூர் மூவேந்தர் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி காவல் கண்காணிப்பாளர் தன்ராஜ் என்பவருக்கு 2 மகன்களும், தனலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். தனக்கு சொந்தமாக அதே மூவேந்தர் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை தனது சொந்த காரணங்களுக்காக மகள் தனலட்சுமிக்கு தான பத்திரமாக எழுதி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், திடீரென உடல் நலம் பதிக்கப்பட்ட தன்ராஜ், தன் மகள் தனலெட்சுமிக்கு எழுதி கொடுத்த வீட்டின் பத்திர பதிவை ரத்து செய்துவிட்டதாக கூறி, அந்த வீட்டில் குடியேறி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகள் தந்தையுடன் அவ்வபோது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இன்று காலை பிரச்சனைக்குரிய வீட்டில் இருந்த தன்ராஜை, அவரது மகள் மற்றும் மருமகன் பாலமுரளி ஆகியோர், அடியாட்களைக் அழைத்து வந்து வீட்டிலிருந்து குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றியுள்ளனர். மேலும் அவருக்கு சொந்தமான பொருட்களையும் தூக்கி வீதியில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களை முகம் சுழிக்க வைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here