போலி மதுபானம் குடித்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

305

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பல்லப்பட்டி கிராமத்தில் 24 மணி நேரமும் போலி மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் இன்று 3 உயிர்கள் பலியாகியுள்ளன. கவுண்டம்பட்டியை சேர்ந்த முருகன், சாமயன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தங்கபாண்டி என்பவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 24 மணி நேரமும் படுஜோராக விற்பனையாகி வரும் போலி மதுபானம் விற்பனையை கண்டு கொள்ளாத அம்மையநாயக்கனூர் போலீசார் நடவடிக்கை எடுக்காததே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்லப்பட்டி மட்டுமின்றி பல்வேறு இடங்களில் அமோகமாக நடந்து வரும் கள்ளச்சாரய விற்பனையை தடுக்காவிட்டால் மேலும் பல உயிர் சேதங்கள் ஏற்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.