சிகிச்சை பெற்று வந்த ஆண் யானை உயிரிழப்பு

130

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானைகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. பெத்திக்குட்டை அருகே சிகிச்சை பெற்ற வந்த ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனசரகத்திற்கு உட்பட்ட திட்டிகுட்டை எனும் இடத்தில் உடல்நல குறைவால் ஆண் யானை ஒன்று விழுந்து கிடந்தது. இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் சில தினங்களாக யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இதற்கிடையில் யானை புத்துணர்ச்சி பெற்று மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து மறுபடியும் வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் யானை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மேட்டுபாளையம் பகுதியில் கடந்த 2 நாட்களில் 3 யானைகள் உயிரிழந்துள்ளது.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 13 யானைகள் உயிரிழந்துள்ளது. துப்பாக்கியால் சுடுதல், உடல்நல குறைவு, உடல் உபாதை உள்ளிட்ட காரணங்களால் யானைகள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் தனி குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of