மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலியானது குறித்து போலிஸார் விசாரணை

175
death due to electric discharge

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பேத்துப்பாறையில்  பிச்சை என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மதுரை எரம்பட்டி பகுதியை சேர்ந்த ரவி, மற்றும் அவரின் மகன் பாண்டி, ஆகிய இருவரும் தங்கி, விவசாய கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் பாண்டி குளித்துவிட்டு ஈரத்துண்டை அங்கிருந்த கம்பி கொடியில் காயபோடும்போது கம்பியில் மின் கசிவு ஏற்பட்டு  பாண்டியை மின்சாரம் தாக்கியதுள்ளது.

இதனை பார்த்த, ரவி தனது மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதையரிந்த பேத்துப்பாறை ஊர் மக்கள் இருவர் உடலையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இச்சம்பவம் குறித்து போலிஸார் வழங்கு பதிவு செய்து விசாரணை  செய்து  வருகின்றனர்