ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை… இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்

747

உகாண்டாவில் “கில் த கேஸ்’ எனும் பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உகாண்டாவில் ஏற்கெனவே அமலில் இருந்த ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் 2014-ம் ஆண்டு நீக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உகாண்டாவின் நீதி நெறி மற்றும் ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் சைமன் லோகோடோ தற்போதைய தண்டனைச் சட்டம் சில குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டது என்றும் இது ஓரினச் சேர்க்கையை குற்றப்படுத்துவதாக மட்டுமே அமைந்திருப்பதாகவும் கூறினார்.

ஓரினச் சேர்க்கையை ஊக்குவித்தல் அவர்களை பணிக்கு எடுத்தல் ஆகிய செயலில் ஈடுபடுவோரும் குற்றவாளிகளாகக் கருதப்படுவர் எனக் குறிப்பிட்டார்.

ஓரினச் சேர்க்கை போன்ற கடும் செயலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of