வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்வு

231

கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்துவருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

பலத்த மழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலத்தின் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிப்புகளுக்க்கு உள்ளாகியுள்ளனர்.

கனமழையால் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துகளில் சிக்கி 91 பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் படுகாயமடைந்து உள்ளனர். மேலும் 59 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளோம் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கேரளாவில் உள்ள எர்ணாகுளம், இடுக்கி, ஆழப்புழா உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of