திருமணத்திற்கு பிறகு ப்ரியாமணி எடுத்த முடிவு | Priya Mani | Manoj Bajpayee

243

பருத்தி வீரன் திரைப்படம் கார்த்திக் மற்றும் ப்ரியாமணி வாழ்க்கையில் அவர்களுக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது மிகையல்ல. சிறந்த நடிகை என்ற பெயருடன் வலம்வந்த ப்ரியாமணி திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகினார்.

இந்நிலையில் மீண்டும் “வெப் சீரிஸ்” மூலம் களமிறங்க உள்ளார். இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் – பிரியா மணி – சந்தீப் கிஷன் கூட்டணியில் ‘தி பேமிலி மேன்’ எனும் திரில்லர் தொடர் அமேசானில் செப்டம்பர் 20ந்தேதி முதல் வெளியாக உள்ளது.

thumb

இந்த தொடரை டி2ஆர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தேசிய புலானாய்வு அமைப்பின் மிகுந்த ரகசியமான சிறப்பு களத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் திவாரி, நாடு மற்றும் நாட்டு மக்களின் மீது பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டறிந்து தடுக்கவும், அதே சமயம் தனது குடும்பப் பொறுப்புகளையும் கவனித்து சிறப்பாகச் செயல்படுகிறார் என்பது தான் ‘தி பேமிலி மேன்’ தொடரின் கதை ஆகும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of