மண்டல கிராம வங்கிகளையும் ஒருங்கிணைக்க முடிவு – மத்திய அரசு

380

பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக மண்டல கிராம வங்கிகளையும் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது.

நாட்டில், மண்டல கிராம வங்கிகளின் எண்ணிக்கை தற்போது 56ஆக இருக்கும் நிலையில், அவற்றை ஒருங்கிணைத்து, அதன் எண்ணிக்கையை 36ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் கடன் வசதி அதிகரிக்கும், வாராக்கடன் குறையும், சேவைகள் சிறப்பாக நிகழும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வங்கிகள் இணைப்பு ஏற்பட்டால் அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் வரும். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் மண்டல கிராம வங்கிகள் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கடந்த 2005ஆம் ஆண்டு 196 வங்கிகள் இருந்த நிலையில் 2006ஆம் ஆண்டு 136ஆகக் குறைக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டிற்குள் 82ஆகக் குறைக்கப்பட்டு, தற்போது 56 வங்கிகள் உள்ள நிலையில் இதனை 36ஆகக் குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of