சென்னையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

129

வடமாநிலங்களில் பெய்த மழை காரணமாக கடந்த சில மாதங்களாக அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகமாகவே இருந்தது.

தற்போது மழை காலம் முடிந்து காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்து, விலை குறைந்துள்ளது.

அதன்படி 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பெரிய வெங்காயம் 30 ரூபாய்க்கும், 50 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ கேரட், பீன்ஸ் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைவின் காரணத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of