கழிவறையில்.. 14 நாட்களாக கிடந்த சடலம்.. பெருந்தொற்று நோயாளிகள் கவனத்திற்கு..

1936

மஹாராஷ்டிர மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்தவர் சூர்யபன் யாதவ். 27 வயதான இவர், காசநோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூர்யபன், கடந்த 4-ஆம் தேதி அன்று காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி அன்று மருத்துவனை கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கு, சூர்யபன் யாதவ் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் கழிவறைக்கு வந்தபோது, மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

பெருந்தொற்று நோயாளிகள், கழிவறைக்கு செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் இந்த அலட்சியம் குறித்து, எதிர்கட்சியினர் சரமாரி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Advertisement