பெட்ரோல், டீசல் அளவை குறைத்து விநியோகித்தால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை

472

பெட்ரோல், டீசல் அளவை குறைத்து விநியோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெட்ரோல் பங்க்குகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சில பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் அளவை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்வதாக புகார் எழுந்தது.

அதனடிப்படையில், தமிழகம் முழுவதுமுள்ள 818 பெட்ரோல் பங்க் நிறுவனங்களில் தமிழக அரசு ஆய்வு நடத்தியது. இதில், சென்னை மண்டலத்தில் 34 நிறுவனங்களும், கோவையில் 24 நிறுவனங்களும், திருச்சியில் 30 நிறுவனங்களும், மதுரையில் 39 நிறுவனங்களும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட 127 நிறுவனங்களில், பெட்ரோல், டீசல் விற்பனையை தடை செய்து தமிழக தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், பெட்ரோல், டீசலின் அளவை குறைத்து விநியோகம் செய்யும் பெட்ரோல் பங்க் நிறுவனங்கள் குறித்து, TN-LMCTS செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்றும், முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of