நான் இதுக்கும் தயார்.., அதுக்கும் தயார்.., ஜெ.தீபா அதிரடி

555

தென்னகத்தின் சிங்கமாக தொண்டர்களாலும், பல அரசியல் தலைவர்களாலும் அழைக்கப்பட்டவர் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா நமது சத்தியம் தொலைக்காட்சிக்காக அவர் அளித்த பிரத்தியேக பேட்டியில்,

“இந்தியாவின் அடுத்த பிரதமர் திராவிட நாட்டை சார்ந்தவராக இருக்க வேண்டும். அதுவும் தமிழனாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவுடன் கட்சியை இணைக்க பேச்சு வார்த்த நடத்தினேன்.இந்த பேச்சிவார்த்தையானது நேற்றுடன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நாங்கள் அதிமுகவில் இணைவதில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு எந்த வித ஆச்சேபினையும் தெரிவிக்கவில்லை. ஆனால் உடன் இருக்கும் தலைவர்கள் தான் எங்களை அதிமுக-வுடன் இணைய விடாமல் தடுத்து வருகின்றன.

அதுமட்டுமின்றி, அதிமுக-வில் இன்னமும் பெங்களூரில் சிறையில் இருக்கும் சகிகலாவின் ஆதிக்கமும், அவரின் தலையீடும் இருந்து வருகின்றது. இந்த தலையீடே அதிமுகவை பாஜகவுடன் நல்லுரவை தொடரவிடாமல் தடுக்கின்றது.

நாங்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட உள்ளோம். ஆனால், எத்தனை தொகுதி என்பதை விரைவில் வெளியிடப்படும். மேலும், இறுதியாக இந்தியாவில் நல்ல பிரதமருக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

இவர் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் அதிமுக தொண்டர்களின் ஓட்டும், ஆதரவும் மூன்றாக பிரிய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of