ஜாலியன் வாலாபாக் படுகொலை.., பிரதமர் மீண்டும் வருத்தம்

448

இந்திய விடுதலை போராட்ட காலத்தில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் உலக நாடுகளை உலுக்கியது. 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி நடந்த அந்த சம்பவத்தின் நூற்றாண்டு தினம் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார்.

இந்தநிலையில் இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் சார்பில் ஜாலியன் வாலாபாக் சம்பவத்தின் நூற்றாண்டு தினம் நேற்றுமுன்தினம் அனுசரிக்கப்பட்டது. லண்டனில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தெரசா மே கலந்து கொண்டார்.

அதில் பேசிய அவர், இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாக மீண்டும் கூறினார். எனினும் இந்த சம்பவத்துக்கு அவர் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of