மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் செல்லும் நிர்மலா சீதாராமன்

657

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று பிரான்ஸ் செல்கிறார்.

இந்தியா – பிரான்ஸ் இடையேயான ரபேல் ஒப்பந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் – பாரதிய ஜனதா இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று பிரான்ஸ் செல்கிறார்.

இந்த பயணத்தின் போது, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சரை சந்தித்து இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாக, கூறப்படுகிறது. ரபேல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் செல்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement